லவர்சீலிப் வனப்பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

0
103

நுவரெலியா, லவர்சீலிப் பகுதியிலுள்ள வனப்பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (14) செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவல்களுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாகவும் , உயிரிழந்தவரின் அங்க அடையாளங்களைக் கொண்டு 50 தொடக்கம் 60 வயதாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here