லாரியில் மோதி தீ பிடித்த பேருந்து.. உடல் கருகி இறந்த பயணிகள்! – நாசிக்கில் கோர விபத்து!

0
222

மகாராஷ்டிராவில் நாசிக் அருகே பயணிகள் பேருந்து லாரியில் மோதி தீ பிடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிராவில் நாசிக் அருகே பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று அதிகாலை 5 மணியளவில் அவுரங்காபாத் சாலையில் சென்று கொண்டிருந்தபோது லாரி மீது மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பேருந்து மோதிய வேகத்தில் தீ பற்றியுள்ளது. தீ வேகமாக பேருந்துக்குள்ளும் பரவி பற்றி எரிந்துள்ளது. இந்த கோர விபத்தில் பேருந்துக்குள் சிக்கிய ஒரு குழந்தை உட்பட 11 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 32 பேர் வரை காயமடைந்து சிகிச்சை பெற்றும் வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here