லிட்ரோ எரிவாயு தொடர்பில் வெளியான அறிவிப்பு – விடுக்கப்பட்ட உடனடி உத்தரவு

0
157

நாட்டின் சில பகுதிகளில் லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில தினங்களாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக வாடிக்கையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில் சிறு விற்பனையாளர்களுக்கு கடன் அடிப்படையில் சிலிண்டர்களை வழங்குமாறு லிட்ரோ நிறுவனம் விநியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

எரிவாயு விற்பனையாளர்களிடம் போதிய அளவான சிலிண்டர்கள் கைவசம் இல்லை என்று தெரியவந்துள்ளது. பெரும்பாலான விநியோகஸ்தர்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனையாளர்களுக்கு கடனுக்கு வழங்குவதில்லை என்றும் பணம் கொடுத்தால் மாத்திரமே சிலிண்டர்களை வழங்குவதாகவும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிறு விற்பனையாளர்கள் பலர் எரிவாயுவை கொள்வனவு செய்வதில் சிரமப்படும் காரணத்தினால் அவர்களுக்கு கடன் வசதியின் கீழ் எரிவாயுவை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு விநியோக முகவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் எரிவாயு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here