நாட்டில் லிட்ரோ சமையல் எரிவாயு (Litro gas) தட்டுப்பாடு நிலை குறித்து லிட்ரோ நிறுவனம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாகப் போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக சில இடங்களுக்கு லிட்ரோ எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
எனினும் இந்த நிலைமை தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் லிட்ரோ சமையல் எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகப் பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று ஹட்டன் (hatton) நகரில் லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு காணப்படுவதாகவும் மற்றும் இதனால் ஹோட்டல் உரிமையாளர்கள் உட்பட வாடிக்கையாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
இரண்டு மூன்று நாட்களாக எரிவாயு சந்தையில் எரிவாயு கிடைக்காததால் கடும் சிரமங்களை எதிர்நோக்குவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.இந்நிலையிலேயே நேற்று முதல் இந்த நிலைமை சீர் செய்யப்பட்டுள்ளது என்று லிட்ரோ நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.