12.5 கிலோ கிராம் நிறைகொண்ட லாப் எரிவாயு கொள்கலனின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 3,835 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனம் எரிவாயு விலையினை அதிகரித்ததைத் தொடர்ந்து லாப் எரிவாயு நிறுவனமும் எரிவாயு விலையினை அதிகரித்துள்ளது.
இதற்கமைய, லாப் எரிவாயு நிறுவனம் நேற்று (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிவாயு விலையினை அதிகரித்துள்ளது.இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறைகொண்ட எரிவாயு கொள்கலனின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 3,835 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 5 கிலோகிராம் நிறைகொண்ட எரிவாயு கொள்கலனின் விலை 59 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 1,535 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.
இதனிடையே, 2.3 கிலோகிராம் நிறைகொண்ட எரிவாயு கொள்கலனின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி முன்னைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.இதேவேளை, 12.5 கிலோ கிராம் நிறைகொண்ட லிட்ரோ எரிவாயு கொள்கலனின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 3,127 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 5 கிலோகிராம் நிறைகொண்ட லிட்ரோ எரிவாயு கொள்கலனின் விலை 58 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 1,256 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.
2.3 கிலோகிராம் நிறைகொண்ட லிட்ரோ எரிவாயு கொள்கலனின் விலை 26 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 587 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.