அட்டனிலிருந்து நுவரெலியா நோக்கி பால் கொண்டுச் சென்ற பவுஸர் வண்டி ஒன்று 18.08.2018 அன்று மதியம் 1.30 மணியளவில் நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் வீதியை விட்டு விலகி கொங்கிறீட் மதிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ்விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான பவுஸர் வண்டியின் சாரதி லிந்துலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிக மழை காரணமாக வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
க.கிஷாந்தன் , எஸ் சதீஸ்