அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட நாகசேனை டில்கூல்ட்றி தோட்டத்தில் இன்று (06) காலை 10.00 மணியளவில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
டில்கூல்ட்றி தோட்டத்தில் 10 வீடுகளை கொண்ட லயன் குடியிருப்பு ஒன்றில் லயத்தின் பின்புறத்தில் இருந்த உயரமான மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒரு வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
மண்மேடு வீழ்ந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் இருந்தவர்களில் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான அனர்த்தம் சம்பந்தமாக கிராம அதிகாரி, தோட்ட நிர்வாகம், லிந்துலையில் பொலிஸார், அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் ஆகியோருக்கும் தெரியப்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள்எமது செய்தி பிரிவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பம் தற்காலிகமாக உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணங்கள் அரச அதிகாரிகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

பா.பாலேந்திரன்.