லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட த இல்டனோல் லிந்துலை எகமுத்துகம கொலனியில் வர்த்தக நிலையம் ஒன்று தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று(30) இரவு 12 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தெரிவித்தனர்.
தீ விபத்தின் போது வர்த்தக நிலையத்தில் எவரும் இருக்க வில்லை அதனால் எவருக்கும் உயிராபத்துக்கள் இல்லை என தெரிவித்தனர்.
தீ விபத்தின் போது வர்த்தக நிலையத்தில் இருந்து அத்தியாவசிய உணவு பொருட்கள், உடைமைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் மின்சாரகோளாரா? அல்லது தனிப்பட்ட விரோதமா? என பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இவ் தீ விபத்து சம்பந்தமாக லிந்துலை பொலிஸ் மற்றும் நுவரெலியா தடவவியல் பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பா.பாலேந்திரன்