லிந்துலை கொவி ஜன சேவை நிலையத்தின் ஊடாக லிந்துலை பகுதியில் விவசாயத்தில் ஈடுப்படும் விவசாயிகளுக்கு தேவையான இராசாயன உரம் இன்று (14) ம் திகதி பகிர்ந்தயிக்கப்பட்டன.
கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு போதியளவு உரம் கிடைக்கில்லை என தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் ஆரம்ப்பாட்டத்திலும். கவனயீர்ப்பு போராட்டங்களிலும் ஈடுப்பட்டனர்.
இந்நிலையிலேயே விவசாய நிலங்களுக்கு அரசினால் அங்கிகரிக்கப்பட்ட உரம் மானிய விலையில் இன்று (14) பெற்றுக்கொடுக்கப்பட்டன.
இது குறித்து விவசாய உத்தியோகஸ்த்தர் சந்தன கருத்து தெரிவிக்கையில்……..
இன்று இந்த பிரதேசத்தில் உள்ள விவசாயிகளுக்கு உரத்தட்டுப்பாடு என்று இல்லை இவர்கள் தங்கள் விவசாய பூமிக்கு தேவையான அளவினை விட உரத்தினை இருமடங்கு இடுகின்றனர்.
இதனால் வளமான நிலம் நச்சுத்தன்மையடைவதாகவும் அவற்றினை கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் அங்கரிக்கப்பட்ட உரத்தினை விவசாய அமைப்புக்கள் ஊடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இன்றும் சுமார் 40 சதவீத இராயன உரம் வர உள்ளதாகவும் அது கிடைத்த உடன் சகல விவசாயிகளுக்கு போதுமான அளவு இராசாயன உரம் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த உரம் பெற்றுக்கொடுப்பதாக கேள்வியுற்று பல விவசாய அமைப்புக்கள் உரத்தினை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்திருந்தமை காணக்கூடியதாக இருந்தன.
கே.சுந்தரலிங்கம்