கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடாளவிய ரீதியில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் செயத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்திலும் கொரோனா தொற்று பரலை தடுத்து மரணங்களை குறைக்கும் நோக்கில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சைனோபம் முதலாம் தடுப்பூசி கடந்த காலங்களில் போடப்பட்டன.
இன்றைய (08) தினமும் நுவரெலியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் பல பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டன.
பல தோட்டங்களை உள்ளிடக்கியுள்ள லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டுவது கட்டத்தில் முதல் தடவையாக டயகம மற்றும் அக்கரபத்தனை பகுதியில் தோட்டங்களில் உள்ள சுமார் 1921 பேருக்கு சைனோபம் முதல் தடுப்பூசி இன்று (08) வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் வைத்திய அதிகாரி வைத்தியர் ஆறுமுகன் ஜெயராஜன் தெரிவித்தார்.
இதற்கமை என்போல்ட் கிராம சேகவர் பிரிவில் வசிக்கும் 680 பேருக்கு மெராயா தமிழ் வித்தியாலயத்திலும்,பெல்மோரா கிராம சேவகர் பிரிவில் கீழ் கிரான்லி கிளனிக்கில் 591 பேருக்கும்,டயகம கிராம சேவகர் பிரிவில் டயகம ஈஸட் தமிழ் வித்தியாலத்தில் 650 பேருக்கும் தடுப்பூசி பெற்றுக்கொடுக்கப்பட்டதாக அவர்; மேலும் தெரிவித்தார்.
தடுப்பூசி பெறுவதற்காக சிரேஸ்ட்ட பிரஜைகள் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டிருந்ததுடன் சுகாதார பொறிமுறைகளுக்கு அமைவாக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
இந்த தடுப்பூசி வழங்கும் செயத்திட்;டத்திற்கு பாதுகாப்பு பிரிவினர் பொது சுகாதார உத்தியோகஸ்த்தர்கள்,வைத்தியர்கள் தாதியர்கள் குடும்ப நல உத்தியோகஸ்த்தர்கள் தொண்டர்கள் என பலரும் ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கே.சுந்தரலிங்கம்