லிந்துலை ராணிவத்தை பகுதியில் வீடு ஒன்றினை உடைத்து வானொலிபெட்டி மற்றும் பணம் திருடிச்செல்லப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
நேற்றைய (23)தினம் தமது வீட்டினை பூட்டிவிட்டு இரவு வேலைக்கு சென்ற வீட்டின் உரிமையாளர் இன்று காலை வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வானோலிபெட்டி என்பன திருடப்பட்டிருந்ததை அவதானித்தனர்.
சம்பவம் தொடர்பாக லிந்துலை குற்றத்தடுப்பு பொலிஸ்ஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு இன்றைய தினம் வந்து பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பா.பாலேந்திரன்