லிந்துல்ல சென்றெகுலர்ஸ் தோட்டத்தில் ஆபத்தான மின் கம்பங்கள்; கவனிக்குமா பிரதேசசபை!

0
169

நுவரெலிய பிரதேச செயலகத்துக்குட்பட்ட லிந்துல சென்றெகுலர்ஸ் தோட்டத்தில் மின் கம்பங்கள் பழுதடைந்த நிலையில் ,எப்பொழுது விழும் என்ற ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.

22752202_1712091555468950_2124230960_n

7,8.9மற்றும்11ஆம் இலக்க லயன் அறைக்கு செல்லும் ஐந்து மின்கம்பங்கள் இவ்வாறு பழுதடைந்த நிலையில் உள்ளது இது தொடர்பில் லிந்துலை மின்சார சபை, அக்ரபத்தனை காவல் துறை,அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகள் பலரின் கவனதுக்கு கொண்டுவந்தும் தீர்வின்றி ஒருவருடத்துக்கும் மேலாக தொடர்கின்றது.

தற்போது மிகவும் மோசமான நிலையில் எந்த நேரத்தில் கம்பங்கள் சாய்ந்து விழும் என்ற அச்சத்தில் லயன் அறைகளில் வாழும் குறிப்பிட்ட மக்கள் இருக்கின்றனர்.பாரிய அனர்த்தங்கள் ஏற்பட முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அச்சத்துக்கு உள்ளான மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

அ.ரெ.அருட்செல்வம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here