மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் பன்முகப்படுத்தப்ட்ட நிதியிலிருந்து நோர்வூட் பிரதேச சபை சமர்வில் வட்டாரம் லெதண்டி டிவிசன் சிறுவர் நிலையம் பாதுகாப்பு வேலி அமைக்கப்படவுள்ளது
நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நோர்வுட் பிரதேச அபிவிருத்தி குழு செயலாளருமாகிய மு. இராமச்சந்திரனின் வேண்டுகோளுக்கிணங்க மூன்று லட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்துள்ளார்.
தோட்ட பிரதான பாதையில் அமைந்துள்ள சிறுவர் நிலையத்திலுள்ள சிறார்களின் பாதுகாப்பு நலன் கருதி மேற்படி திட்டம் முன்னெடுக்கப்படுவதாக மு.இராமச்சந்திரன் தெரிவித்தார்.