மத்திய மலை நாட்டில் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து அடை மழை பெய்து வருகின்றன. நீரேந்தும் பிரதேசங்களில் பெய்து வரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக கெனியோன் மற்றும் லக்ஸபான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று (26) திகதி மாலை முதல் சுமார் ஆறு அங்குலம் திறக்கப்பட்டதாக மின்சார துறையைச் சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்தார்;.
இதே வேளை ஏனைய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் கனிசமான அளவு உயர்ந்துள்ளன. எனவே நீர்த்தேக்கத்தின் கீழ் தாழ்நிலப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என மின்சார சபை அதிகாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்
இதே வேளை நாட்டில் இன்றைய தினம் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ, கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளன
கே.சுந்தரலிங்கம்