லோகி தோட்ட குளத்திலிருந்து இளைஞன் சடலமாக மீட்பு!

0
6

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோகி தோட்ட குளத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

உடப்புசலாவ பகுதியில் இருந்து தொழில் நிமிர்த்தம் தலவாக்கலை நகருக்கு வந்திருந்த இளைஞன் ஒருவரே நேற்று 04.08.2025 மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் தனது நண்பருடன் குளிப்பதற்காக அங்கு சென்ற சமயம் குளத்தில் தவறி விழுந்ததன் காரணமாக உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் லிந்துலை பெல்கிரேவியா தோட்டப்பகுதியில் தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்றதாகவும் சடலமாக மீட்கப்பட்டவர் 20வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here