வகுப்பறைகளில் கையடக்க தொலைபேசி பயன்பாட்டிற்கு நெதர்லாந்தில் தடை

0
166

எதிர்வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தில் வகுப்பறைகளில் கையடக்க தொலைபேசி, ஸ்மார்ட் கைக்கடிகாரம், உள்ளிட்ட எண்மயக்கருவிகளின் பயன்பாட்டிற்கு தடைவிதிக்கப்படும் என்று நெதர்லாந்தின் கல்வி அமைச்சர் Robbert Dijkgraaf தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மாணவர்களின் கவனச்சிதறல் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெதர்லாந்தின் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மருத்துவ காரணங்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கு மாத்திரம் கையடக்க தொலைபேசி உள்ளிட்ட எண்மயக்கருவிகளை பயன்படுத்த அனுமதிக்கப்படும் எனவும் நெதர்லாந்தின் கல்வி அமைச்சர் Robbert Dijkgraaf தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here