வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம்: மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

0
65

2025 ஜனவரி மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் இன்று (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை நலன்புரி நன்மைகள் சபையின் தவிசாளர் ஜெயந்த விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்போது, அஸ்வெசும பயனாளிகள் இன்று முதல் வங்கிக் கணக்குகளில் இருந்து இன்று முதல் தங்கள் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 17,222,922 பயனாளிகளுக்கு 12 பில்லியனுக்கும் அதிகமான (ரூ. 12,536,422,500.00) நிதி விநியோகிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தவிசாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை அடையாளம் கண்டு விண்ணப்பங்கள் கோரி அஸ்வெசும கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here