வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான மனுவை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

0
5

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை வழக்கிலிருந்து நீக்குவதற்கான சட்டமா அதிபரின் முடிவை இரத்து செய்யும்படி அளிக்கப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் இன்று (15) அனுமதியளித்துள்ளது.

காணாமல் போன 11 இளைஞர்களின் பெற்றோர் சார்பில் இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முன்வைக்கப்பட்ட மனுவை நீண்ட நேரம் பரிசீலித்த பின்னர் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி இந்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி விசாரணைக்க எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பில் வசித்த 11 இளைஞர்களை கடத்தி காணாமலாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரினால் தொடரப்பட்டிருந்த வழக்கின் 14 ஆவது பிரதிவாதியாக கடற்படையின் முன்னாள் தளபதியான வசந்த கரன்னாகொட பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here