வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று (18) ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.
முல்லைத் தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் உயிரிழந்த இளைஞனின் மரணத்துக்கு நீதிகோரி இன்று இந்த ஹர்த்தாலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளும் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வடக்கு, கிழக்கில் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று திட்டமிட்டப்படி ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் எனவும் நன்மை கருதி காலையில் மாத்திரம் நடைபெறும் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.