வடக்கு ஜப்பானில் சுனாமி!

0
5

ரஷ்யாவின் தூர கிழக்கு பிராந்தியமான கம்சட்காவில் 8.8 ரிச்டர் அளவில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தை தொடர்ந்து ஜப்பானை சுனாமி பேரலைகள் தாக்கியுள்ளது.

இந்த சுனாமி பேரலை  ஜப்பானின் வடக்கு ஹொக்கைடோ தீவில் சுமார் 30 சென்டிமீட்டர் (ஒரு அடி) உயரத்திற்கு மேலெழுந்துள்ளது.

அங்கு அடுத்தடுத்த அலைகள் மிக அதிகமாக தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரைகளில், ஒசாகாவின் தெற்கே வகயாமா வரை, மூன்று மீட்டர் உயர அலைகள் எழும்பும் என ஜப்பானின் வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதுவரை எந்த காயங்களோ அல்லது சேதங்களோ பதிவாகவில்லை என ஜப்பானின் தீயணைப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம்  தெரிவித்துள்ளது.

ஹொக்கைடோவிலிருந்து ஒகினாவா வரையிலான ஜப்பானிய கடற்கரையோரத்தில் உள்ள 133 நகராட்சிகளில் 900,000 க்கும் மேற்பட்ட மக்களை இடம்பெயருமாறு  நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here