குருநாகல் – மஹோ மற்றும் அநுராதபுர தொடருந்து மார்க்கத்தில் மேம்படுத்தப்பட்ட சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்பை நிறுவுவதற்காக இந்திய அரசு, முதல் தவணைக்கான நிதியை விடுவித்துள்ளது.
அதன்படி, இலங்கை ரூபாவில் 770 மில்லியன் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதியுடன் இணைந்து இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
முன்னதாக, இந்த திட்டம் சலுகை கடன் திட்டமாக அறிவிக்கப்பட்ட போதிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது, இந்த திட்டம் மானிய திட்டமாக மாற்றப்பட்டது.
அதற்கமைய, மேம்படுத்தப்பட்ட சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்பை நிறுவும் பணிகளை, 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்திய உதவியுடன், வடக்கு தொடருந்து மார்க்கத்திலுள்ள தண்டவாளங்கள், மணித்தியாலத்துக்கு சுமார் 100 கிலோமீற்றர் வேகத்தில் தொடருந்து பயணிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.