இந்திய உயர்ஸ்தானிகர் டாக்டர். எஸ்.அஜிராவை ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் 26/10/2011 பண்டாரவளையில் சந்தித்திருந்தார்.
இதன் போது ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றிய விஷேட கலந்துரையாடல்களும் கடந்த காலங்களில் இந்திய அரசினால் வழங்கி வைக்கப்பட்ட 1990 அம்புலன்ஸ் சேவை மற்றும் வீடமைப்பு உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற ஏனைய உதவிகளுக்கும் நன்றிகள் பகிரப்பட்டிருந்தது.
மேலும் கிளங்கன் வைத்தியாசலை உட்பட ஏனைய வைத்தியசாலைகள் தரமுயர்த்துவது சம்பந்தமாகவும் தொடர்ந்து பெருந்தோட்ட சுகாதார நிலைமைகளை சீர்திருத்தம் செய்து தருமாறும் மாகாணசபைத் தேர்தலை நடாத்தி அதிகாரப்பரவலாக்கலை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமன்றி இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சி பட்டறை ,புலமைப்பரிசீல்களை இந்திய அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் அவரிடத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இத் தருணத்தில் இந்திய உயர் ஸ்தானிகரால் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரான வடிவேல் சுரேஷ் சேவையினைப் பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதோடு வடிவேல் சுரேஷ் ஊடாக மலையக மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் நினைவுச்சின்னம் ஒன்று வழங்கிவைக்கப்பட்டது.
நீலமேகம் பிரசாந்த்