கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட வட்டக்கொடை மேற்பிரிவு தோட்டத்தில் குப்பைக்கூழங்கள் முறையற்ற முறையில் கையாள்வதால் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறித்த ஊர்மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த தோட்டத்தில் குப்பைகளை இடுவதற்கு முறையான இடம் கிடையாது அதேபோல இடப்பட்ட குப்பைகளை அப்புறப்படுத்த தோட்ட நிர்வாகமும் எவ்வித செயற்பாடுகளையும் முன்னெடுக்காத நிலையில் இடப்படுகின்ற குப்பைக்கழிவுகள் நிறைந்து வழிவதோடு அசுத்தமான மணம் வீசுவதாக குறித்த ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் குப்பை குழிகளில் நீர்த்தேங்கும் பொருட்களின் ஊடாக நீர் தேங்குவதால் சீரற்ற காலநிலையால் டெங்கு பரவும் அபாயம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் அதனை அப்புறப்படுத்துவதற்கு தோட்ட நிர்வாகம் அல்லது கொட்டக்கலை பிரதேச சபை முன்வர வேண்டும்.மேலும் வாராந்தம் குப்பைகளை அகற்றுவதற்கும் முறையாக குப்பைகளை இடுவதற்கு குப்பைக்குழிகளை அமைத்து தருமாறு வட்டக்கொடை மேற்பிரிவு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நீலமேகம் பிரசாந்த்