இவ்வாரம் மது மற்றும் போதைப்பொருள் பாவனையை ஒழிக்கும் வாரமாக அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டதற்கு இணங்க இவ்வாரத்தின் 21 தொடக்கம் 25 ம் திகதி வரை பொலிஸ் உத்தியோகத்தர்களினால் விழிப்புணர்வு ஆலோசணை கருத்தரங்கு இடம்பெற்று வருகின்றது.அந்தவரிசையில் வட்டக்கொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் போதை மற்றும் மது ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு மேற்கொள்ளப்பட்டது.
தலவாக்கலை பொலிஸ் அதிகாரிகளால் நடாத்தப்பட்ட இவ்விழிப்புணர்வு செயற்றிட்டத்தில் மது மற்றும் போதை பொருட்களை பாவிப்தால் ஏற்படும் விளைவுகள் பற்றிய தெளிவூட்டல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. பிரதி அதிபர் ந.சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்களும் மாணவர்களும் பாரிய ஒத்துழைப்பை வழங்கினர்.மதுவற்ற போதையற்ற நாடாக மாற்ற நாமும் தங்களது பங்களிப்பை ழங்குவதாக மாணவர்களும் ஆசிரியர்களும் கூறியமை குறிப்பிடத்தக்கது.
தகவல்:நீலமேகம் பிரசாந்த்