ஐயப்பன் பூஜை பருவக்காலங்கள் ஆரம்பித்துள்ளதால் மலையகத்தில் பல இடங்களில் விசேட பூஜைகள் நடைபெற்று கொண்டிருக்கும் இவ்வேளையில் வட்டக்கொடை யொக்ஸ்போர்ட் தோட்டத்தில் வருடார்ந்த ஐயப்ப பூஜை இடம்பெற்றது.
வட்டகொடை யொக்ஸ்போர்ட் கிராமத்தில் நடைபெற்ற ஐயப்பன் வருடார்ந்த மண்டலாபிஷகே பூஜை இம்முறை 8வது தடவையாக 24.12.2018 அன்று க.மகேஸ்வர குருக்கள் தலமையில் நடைபெற்றது. அதில் கிராம முகாமையாளரும் கலந்து சிறப்பித்தார்.
இது கிராம சமூக தொண்டர் அமைப்பு மற்றும் கோயில் நிர்வாகம்,கிராம பொது மக்களினாலும் ஒழுங்கமைக்கப்பட்டு வெகு சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
– தகவல்:நீலமேகம் பிரசாந்த்