கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கே. டீ .குருசாமி பழ. புஸ்பநாதன் ஆகியோர் தலைமையில் வட கொழும்பு மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான கலந்துரையாடல் நேற்று முன்தினம் (16) இடம்பெற்றது
இக்கலந்துரையாடலில் 155 ,167,112 இலக்க பேரூந்து வழித்தட பிரச்சினை வட கொழும்பு வாகன தரிப்பிடம் ,விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் மைதானம் சார் பிரச்சினைகள் ,பொது மலசலகூட வசதி,கோவில் திருவிழாக்களுக்கு நந்தி கொடியினை பெற்றுக்கொள்வது ,வியாபார உரிமம் பெற்றுக்கொள்ளுதல் ,வடிகான் பிரச்சினை,வீதி அபிவிருத்தி போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டது.
இதில் பல விடயங்களுக்கு அதிகாரிகளினால் தீர்வுகள் வழங்கப்பட்டதோடு ஒரு சில விடயங்களுக்கு விரைவில் தீர்வை வழங்குவதாகவும் உறுதி அளிக்கப்பட்டது .
இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திர ,மாநகர முதல்வர் விராய் கெளி பல்தஷார், மற்றும் மாநகர பிரதி முதல்வர் உட்பட்ட பலரும் கலந்து கொண்டனர் .