கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதியன்று ஹேக்கித்த, அல்விஸ்வத்த பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
தொடர்ந்தும் இச் சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வந்த நிலையில், கொலை சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (05) பிற்பகல் முகத்துவாரம் மற்றும் வத்தளை பகுதிகளிலேயே இச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 17,25 மற்றும் 27 வயதானவர்கள் என தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு கைப்பேசிகளையும் பொலிஸார் கைப்பற்றினர்.
பொலிஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் 2023 ஆம் ஆண்டு மஹாபாகே பகுதியில் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துக்கு உதவியாக இருந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.