வத்தளை, ஹூனுப்பிட்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் வீடொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
சமீப காலமாக நாட்டின் பல பகுதிகளிலும் சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.