வனப்பகுதிகளுக்கு தீ வைப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை!

0
5

வனப்பகுதிகளில் தீ வைப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு தீர்மானித்துள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலாளரும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவின் தலைவருமான கே.ஜி.எஸ். நிஷாந்த தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலவும் வரட்சியான வானிலை காரணமாக, பல்வேறு காரணங்களுக்காக சிலர் காடுகளுக்கு தீ வைப்பது அவதானிக்கப்படுகிறது.

மேலும் அவர்களை சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கு வன பாதுகாப்புத் திணைக்களம், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் மாவட்டத்தில் உள்ள பிற தொடர்புடைய நிறுவனங்களால் ஒரு விசேட திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, இரத்தினபுரி மாவட்டத்தின் இம்புல்பே பிரதேச செயலகப் பிரிவின் ஹல்பே கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள ரத்தனகொல்ல காட்டில் கடந்த 6 ஆம் திகதி முதல் வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை பெரும் தீ விபத்து ஏற்பட்டது, குறித்த தீ விமானப்படை ஹெலிகாப்டரின் உதவியுடன் அணைக்கப்பட்டது.

எனவே இவ்வாறான தீ பரவலை மேற்கொள்வோருக்கு திராக சட்ட நடவடிக்கை எடுக்கபப்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here