டிக்கோயா வனராஜா பகுதியில் மரத்திலிருந்து சிறுத்தைப்புலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குபட்ட டிக்கோயா வனராஜா பழையகாடு தோட்டப்பகுதியிலிருந்து சிறுத்தைப்புலியொன்று இன்று 7 திகதி காலை 10.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வேலைக்கு சென்ற தொழிலாளி ஒருவர் குறித்த சிறுத்தை மரத்தில் இருப்பதனை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். பொலிஸார் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்ததனை தொடர்ந்து சிறுத்தையினை மீட்பதற்கு நல்லதண்ணீர் வனஜீவராசி வருகை தந்து சிறுத்தையினை மீட்கும் பணியில் ஈடுபட்டடுள்ளனர்.
குறித்த சிறுத்தை மிருகங்களுக்கு வைக்கப்பட்ட வலையினுள் சிக்குண்டு அந்த கம்பியுடன் மரத்தில் ஏறிய போது கம்பி மரத்தில் மாட்டிக்கொண்டதனால் குறித்த சிறுத்தை இறங்க முடியாதுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக்காலமாக மலையகத்தில் மக்கள் குடியிருப்பபு பகுதிகளிலும் தேயிலை மலைகளிலும் சிறுத்தைப்புலிகளின் நடமாற்றும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
மலைவாஞ்ஞன்