நுவரெலியா மாவட்டத்தில் நிலவி வரும் வரட்சியான காலநிலையினையடுத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சடுதியாக குறைந்து வருகின்றன.
தேசிய நீர்மின் உற்பத்திக்கு பாரிய பங்களிப்பினை வழங்கி வரும் நீர்த்தேக்கங்களின் ஒன்றான காசல்ரி நீர்த்தேக்கத்தில் இது வரை சுமார் 24.3.சதவீதம் தாழிரங்கியுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதே வேளை மவுசாகலை நீர்த்தேக்கத்தில் 47 சதவீதம் வரையும்,மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் 49.1 சதவீதம் வரையுமே தற்போது நீர் சேமிக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். எனவே பொது மக்கள் இந்த வரட்சியான காலப்பகுதியில் நீரினை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் மின்சார சபை பொறியியலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
காசல்ரி நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் மிகவேகமாக குறைந்துள்ளதனால் நீர் முழ்கி கிடந்த ஆலங்யங்கள், கட்டடங்களில் இடுபாடுகள்,நீரில் மூழ்கிய சிறிய குன்றுகள் ஆகியன தென்பட ஆரம்பித்துள்ளனர்.
இதனால் நீர்மின் உற்பத்தியும் பாரிய அளவில் குறைவடைந்துள்ளன.
நீர்த்தேகத்தில் நீர் வற்றிப்போய் மைதானமாக காட்சியளிப்பதனால் சிறுவர்கள் விளையாடுவதற்கு மைதானமாக பயன்படுத்தி வருகின்றனர். எவ்வாறான போதிலும் தொடர்ச்சியாக வரட்சியான காலநிலை நிலவி வருவதனால் பல இடங்களில் குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புல பிரதேசங்களில் உள்ள நீரோடைகள் வரண்டுப் போயுள்ளதனால் குளிப்பதற்கும் நீர் இன்றி பல கிலோமீற்றர் சென்று குளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளன.
மலைவாஞ்ஞன்