இந்த ஆண்டுக்கான வரலாற்று சிறப்புமிக்க கண்டி எசல பெரஹெரா விழா நேற்று (09) பகல் பெரஹெராவுடன் நிறைவடைந்தது.
நான்கு தேவலே பெரஹெராக்கள் பாரம்பரிய சடங்கு நடைமுறைகளைப் பின்பற்றி நேற்று விடியற்காலையில் கெட்டம்பே திய கபன தோட்டாவிற்கு நீர் வெட்டும் சடங்கை (திய கபீம) நிகழ்த்துவதற்காகச் சென்றன.
விழாவுக்குப் பின்னர், பகல் பெரஹெரா கண்டி வீதிகளில் அணிவகுத்துச் சென்று, பிற்பகலில் இந்த ஆண்டிற்கான அதன் புனித பயணத்தை நிறைவு செய்தது.
இந்த ஆண்டு கண்டி எசல திருவிழாவின் பிரமாண்டமான ரந்தோலி பெரஹெரா கடந்த வெள்ளிக்கிழமை வீதிகளில் அணிவகுத்துச் சென்றன.
எசல ரந்தோலி பெரஹெராவின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை அன்று கண்டி வீதிகள் பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
வரலாற்று ஊர்வலத்தைக் காண ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் கூடியிருந்தனர்.
கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், சத்தார மகா தேவாலயாக்களின் நிலமேக்கள், தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேலாவுடன் இணைந்து ஜனாதிபதிக்கு சன்னாசத்தை (சுருள்) வழங்கியதைத் தொடர்ந்து இந்த ஆண்டு எசல விழா நிறைவடைந்தது.
இந்த ஆண்டு கண்டி எசல விழா ஜூலை 25 அன்றுதொடங்கியமை குறிப்பிடத்தக்கது.