வரலாற்றுசிறப்பு மிக்க கதிர்காம கந்தனின் ஆடி மகோற்சவம் உத்தியோகபூர்வமாக 13.07.2018.வெள்ளிகிழமை கொடியேற்றத்துடன் பஷ்நாயக்க நிலமே தலைமையில் சுப நேரம் 05மணியளவில் ஆரம்பமானதுஇதன் போது நாட்டின் பலபாகங்களில் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள் கதிர்கந்தனின் அருளை பெற்று செல்வதற்காக வருகை தந்துள்ளனர். அந்தவகையில் 13ம் திகதி ஆரம்பிக்கபட்ட இந்த ஆடிமகோற்சவம் எதிர்வரும் 27ம் திகதி இடம் பெறஉள்ளதோடு எதிர்வரும் 28ம் திகதி தீர்த்த மகோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.
பதுளை பண்டாரவளை நுவரெலியா வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடியார்கள் கதிர்காமத்தை வந்தடைந்துள்ளனர்.
இதேவேலை கதிர்காமத்திற்கு வருகை தந்திருக்கின்ற அடியார்களுக்காக விஷேட போக்குவரத்து வசதி குடிநீர் வசதி மருத்துவ வசதி என்பன பல்வேறு அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கபட்டுள்ளது.
கதிர்காமகந்தனின் அடி மகோற்சவத்தினை முன்னிட்டு முதலாவது நாளுக்குரிய கலை கலாசாரம் விழுமியங்களை உள்ளடக்கிய உள்வீதி ஊர்வலமானது பிரதான கதிர்காமம் கந்தன் ஆலயத்தில் ஆரம்பிக்கபட்டு தெய்வானையம்மன் ஆலயத்தின் உள்வீதி ஊடாக வல்லியம்மன் ஆலயத்தின் ஊடாக மீண்டும் பிரதான கதிர்காமம் கந்தன் ஆலயத்தினை சென்றடைந்தது.
கதிர்காமத்திற்கு வருகின்ற பக்த அடியார்கள் மாணிக்ககங்கையில் நீராடும் பொழுது மிக அவதானமாக நீராடுமாறும் ஆழமான பகுதிகளுக்கு சென்று நீராடுவதை தவிர்த்து கொள்ளுமாறும் கதிர்காமம் பொலிஸார் கோரியுள்ளனர். கந்த பெருமானை தர்சிக்க வருகின்றஅடியார்களுக்கு ஆலயத்தின் வளாகத்திலும் கிரி விகாரையின் வளாகபகுதியிலும் விஷேட அண்ணாசாலைகளும் அமைக்கபட்டிருக்கின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதீஸ்)