அரசாங்கத்தால் முன்வைக்கப்படவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான முதலாவது வாசிப்பை ஒக்டோபர் 03ஆம் திகதி முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தை நவம்பர் 06ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 08ஆம் திகதிவரை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உத்தேச வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதற்கு முன்பு, முக்கியமான பல சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றவும் அரசாங்கம தீர்மானித் துள்ளது.
சமீபத்திய கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதை தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற சேவைகள் பணிப்பாளர் எம். ஜெயலத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை இரத்துச் செய்வதை நோக்கமாகக் கொண்ட சட்டமூலம் முன்வைக்கப்படவுள்ளதுடன் முக்கியமான சட்டமூலங்களில் இதுவும் ஒன்றாகும்.