சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கருப்பு’ படத்தின் டீசர் நேற்று (ஜூலை 23) வெளியானது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படம் ‘கருப்பு’. இதில் சூர்யா உடன் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவாதா, யோகி பாபு, இந்த்ரன்ஸ், நட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்துக்கு பிரபல பாடகர் திப்புவின் மகன் சாய் அபயங்கர் இசை அமைக்கிறார். ட்ரீம் வொரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரிக்கின்றனர்.
இந்நிலையில், சூர்யாவின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘கருப்பு’ படத்தின் டீசரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.
மாஸான வசனங்களும் அதற்கேற்ற இசையும் டீசரில் வெளியாகியுள்ளன.
திங்க் மியூசிக் கில் வெளியான இந்த டீசரை 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்த்துள்ளனர். இதேவேளை ஏனைய யு டியூப் சனல்களிலும் வலைத்தளங்களிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.