வரி அடையாள எண் மோசடி கும்பல் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை

0
65

வரி செலுத்துவோருக்கான அடையாள இலக்கத்துடன் தொடர்புடைய வங்கிச் சேவை எனக் கூறி மக்களை ஏமாற்றும் கும்பல் தொடர்பில் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

தனியார் வங்கிக் கணக்குகளில் பணத்தை ஏமாற்றும் ஹேக்கர் கும்பல் இயங்கி வருவதாக குருநாகல் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில், குருநாகல் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் சுஜித் வெதமுல்ல தெரிவிக்கையில்,

“மோசடி கும்பலிடம் சிக்கி பல லட்சம் ரூபாய் பெறுமதியான பணத்தை இழந்தவர்கள் தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரச வங்கியின் பணியாளர்கள் என அழைக்கும் கும்பல் வரி செலுத்துவோருக்கான அடையாள இலக்கம் தொடர்பாக வங்கியில் கணக்கை எவ்வாறு பராமரிப்பது என்று தெரிவிக்கிறார்கள், பின்னர் கணக்கை அமைக்க வேண்டிய வங்கி வாடிக்கையாளரின் பண பரிமாற்ற கடவுச்சொல்லை (OTP) கேட்கிறார்கள்.

மக்களும் தான் ஏமாற்றப்படுவது தெரியாமல் கடவுச்சொல்லை கொடுக்க அதனை பெற்றுக்கொள்ளும் கும்பல் தொடர்பு கொண்ட நபரின் வங்கிக் கணக்கிற்குள் நுழைந்து லட்சக்கணக்கில் பணத்தை எடுத்துச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.இவ்வாறு ஏமாற்றி இந்த மோசடி கும்பல் நேற்று குருநாகல் நகரிலுள்ள பிரதான கல்வி நிறுவனமொன்றில் பணியாற்றும் நபரின் கணக்கில் 2 இலட்சத்து 60000 ரூபாவை அபகரித்துள்ளனர்.

அரச வங்கியொன்றின் உள்ளக தகவல்களின் படி கடந்த வாரம் இன்னொரு கணக்கிலிருந்து 10 இலட்சம் ரூபா பணம் பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறு தொலைபேசியில் அழைத்து தனிப்பட்ட தகவல்களைக் கேட்கும் மோசடியாளர்களிடம் சிக்க வேண்டாம். இது தொடர்பில் குருநாகல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் ஊடாக மக்களுக்குத் தெரியப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here