தீர்வை வரியை குறைத்துக்கொள்வதற்காக அமெரிக்காவின் எவ்வாறான நிபந்தனைகள் ஏற்கப்பட்டன என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச வலியுறுத்தினார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இலங்கைக்கு ஆரம்பத்தில் 44 சதவீத வரி விதிக்கப்பட்டது. பின்னர் அது 30 ஆக குறைக்கப்பட்டது. இறுதியில் 20 சதவீதமாக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களுக்கு வர வேண்டும் என அமெரிக்க தரப்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, இலங்கை ஏற்றுக்கொண்டுள்ள நிபந்தனைகள் எவை? சோபா ஒப்பந்தத்தக்குரிய இணக்கம் ஏற்பட்டுள்ளதா? சோபா ஒப்பந்தம் ஏற்கப்பட்டால் அமெரிக்க படைகள் நாட்டுக்குள் வர முடியும். ஆகவே, பாதுகாப்பு நிபந்தனைகள் ஏற்கப்பட்டனவா? இது பற்றி எமக்கு தெரியாது. ஏற்கப்பட்டிருந்தால் அவை எவை என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஏழு ஒப்பந்தங்கள்கூட இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. எனவே, அமெரிக்காவுடன் ஏற்கப்பட்ட நிபந்தனைகளை இந்த அரசாங்கம் வெளிப்படுத்தும் என்பதை நம்ப முடியாது.” – என்றார்.