அட்டன் நீக்ரோதாராம விகாரையின் வருடாந்த துருத்து மகா பெரஹரா 20.01.2019 அன்று இரவு இடம்பெற்றது.
மத்திய மாகாணத்தில் நடைபெறும் ஒரே ஒரு துருத்து மகா பெரஹராவான இது அட்டன் மல்லியப்பு சந்தியிலிருந்து ஆரம்பித்த வீதி வலம் வருதல், அட்டன் நகர் வரை சென்று அங்கிருந்து விகாரை வரை சென்றது.
இந்த பெரஹராவில் மேல்நாட்டு, கீழ் நாட்டு, சப்பிரகமுவ பாரம்பரிய மற்றும் புதிய கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும் கலந்து தமது கலைத் திறமையை வெளிப்படுத்தினர். மேலும் இங்கு யானைகளின் பவனியும் விசேடமாக இடம்பெற்றது.
இதன்போது அட்டன் மற்றும் ஏனைய பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான பௌத்த அடியார்களும், மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமான், எம்.திலகராஜ், அட்டன் டிக்கோயா நகர சபை தலைவர், பிரதி தலைவர் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும், இதனை பார்வையிடுவதற்காக அதிகளவான மக்களும் வந்திருந்தமை குறிப்பிடதக்கது.
க.கிஷாந்தன்