“ அரசாங்கம் சொல்வதைக்கூட கேட்கும் நிலையில் தோட்ட நிர்வாகங்கள் இல்லை. எனவே, தொழிலாளர்களை மதிக்ககூடிய, தோட்டங்களை முறையாக நிர்வகிக்ககூடிய தரப்புகளுக்கு தோட்டங்களை வழங்குவது சிறந்தது.”
இவ்வாறு இதொகாவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
ரூ. 1700 தொடர்பில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதனை பெருந்தோட்ட நிறுவனங்கள் ஏற்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் வர்த்தமானி அறிவித்தலை மீறியமை தொடர்பில் வழக்கு தொடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.