வலப்பனை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள தெரிவு செய்யப்பட்ட சமூக அமைப்புகளுக்கு மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் விளையாட்டு பொருட்கள்,கூடாரங்கள் என பல பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது ம.ம.மு தலைவர் வே.ராதாகிருஸ்ணன், மலையக தொழிலாளர் முன்னணி நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்