மஹா சிவராத்திரி பெருவிழா இன்று அனைத்து சிவ ஆலயங்கள் உட்பட அனைத்து இந்து மத ஆலயங்களிலும் கொண்டாடப்படுகின்றது.சைவ மதத்தின் மூல கடவுளான சிவனுக்கு ஒரு நாள் ஒதுக்கி கண்விழித்து சிவனை வழிபடும் இம்மாஹா தினத்தில் அனைவரும் நாட்டு மக்களின் நலன் வேண்டியும் சமூகத்தின் உயர் வேண்டியும் வழிபட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உபச்செயலாளர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா எனும் ஆட்கொள்ளி நோய் இன்றுவரை உலகத்தை ஆக்கிரமித்து கொண்டு இருக்கின்றது. இதனால் நாட்டின் பொருளாதாரமும் இறுக்கமடைந்துள்ளது இந்நிலையில் இருந்து நாடும் உலகமும் விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மக்கள் அனைவரும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ வேண்டுமென இம்மாஹா சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்போம் என குறிப்பிட்டார்.