வவுனியா இளைஞரை தாக்கி பணம் பறித்த மூவர் கைது!

0
6

யாழில் இருந்து வருகை தந்து வவுனியா இளைஞன் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்து சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் நேற்று (01) தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மூவர் கார் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியாவிற்கு வருகை தந்து வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக நின்ற 18 வயதான இளைஞன் ஒருவரை காரில் கடத்திச் சென்று குடியிருப்பு குளக்கட்டு பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பின்னர் அவரது வங்கி அட்டையை பறித்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் பெற்று விட்டு தாக்குதலுக்குள்ளான இளஞனை புதிய பேரூந்து நிலையம் முன்பாக இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த விசாரணைகளையடுத்து யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 19, 21 மற்றும் 19 வயதான இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளநர்.

மேலும் சம்பவம் தொடர்பிலான , மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here