வாகனங்களின் வேகத்தை கண்காணிக்க புதிய கெமரா

0
8

வேகமாக வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்டறிவதற்காக பொலிஸார் புதிய கெமராக்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இந்த சாதனங்களில் இரட்டை கெமராக்கள் மற்றும் இரவு நேரத்திலும் தெளிவாகப் பார்வையிடும் தொழில்நுட்ப வசதிகள் இருக்கின்றன.

சாரதியின் புகைப்படம், வாகன எண், நிகழ்நேர வேகம் ஆகியவற்றை படம்பிடிக்கும் திறன் கொண்டதாக இந்த சாதனங்கள் அமைந்துள்ளன. வீதிப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் விபத்துகளைக் குறைப்பதற்காகவும் பொலிஸாரினால் இந்த கெமராக்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த சாதனங்கள், இரவில் மாத்திரம் 1.2 கிலோ மீற்றர் தூரத்திலிருந்து வாகனங்களைக் கண்காணிக்க பயன்படுத்தப்படுகின்றன. இதில் பதிவுசெய்யப்பட்ட காணொளிக் காட்சிகள் நீதிமன்றத்தில் ஆதாரமாக முன்வைக்கப்படும். இதனால் பொலிஸார் போக்குவரத்து மீறல்களுக்கான தெளிவான ஆதாரங்களை முன்வைக்க முடியும்.

நாடு முழுவதும் இவ்வாறான 30 கமராக்களை பொலிஸார் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஒவ்வொரு சாதனமும் 3.3 மில்லியன் ரூபாய் பெறுமதியானவை. கூடுதலாக 15 அலகுகளுக்கு கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவை 45 பொலிஸ் பிரிவுகளுக்குள் பயன்படுத்தப்படவுள்ளன. இதன்மூலம் போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸார் எதிர்பார்த்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here