வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஆபத்தான உதிரி பாகங்களை அகற்றும் சட்டம் இன்று திங்கட்கிழமை (08) முதல் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
பஸ்கள் மற்றும் சில வாகனங்களில் கூடுதல் பாகங்கள் பொருத்தப்படுவதால் விபத்துகள் ஏற்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, வாகனங்களில் இருந்து ஆபத்தான உதிரி பாகங்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இரண்டு கட்டங்களாக அதனை செயற்படுத்த இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், இன்று (08) முதல் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன கூறுகிறார்.
வீதிக்கு தகுதியற்ற நிலையில் வாகனம் ஓட்டுதல்,நிறங்களை மாற்றுதல், வெவ்வேறு நிற கூடுதல் விளக்குகளை ஒளிரச் செய்தல், , மோட்டார் வாகனங்களின் பின்புறம் மற்றும் பக்கவாட்டில் வடிவமைப்புகள் மற்றும் விளம்பரங்களைக் காட்சிப்படுத்துதல், சட்டவிரோத நிறுவல்களை மாற்றுதல் போன்ற பிரச்சினைகள் குறித்து சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.