வாகன இறக்குமதிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதா?

0
117

வாகன இறக்குமதி சந்தையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில் மத்திய வங்கி ஆளுநர் அதற்கு பதில் அளித்துள்ளார்.

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என்றும், வாகன சந்தை முற்றிலும் திறந்திருக்கும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் டொக்டர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வங்கி ஆளுநர் , தனக்குத் தெரிந்தவரையில் வாகன இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய வங்கி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும்,அரசாங்கம் அத்தகைய எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் கூறினார்.

இதனை உறுதிப்படுத்தும் அறிக்கையை துறை சார் அமைச்சர் வெளியிடுவார் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here