மட்டக்களப்பு கதிரவெளி வாகரை கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மூவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
கதிரவெளி புதூரைச் சேர்ந்த த.சதிஜன் வயது (26), கதிரவெளியைச் சேர்ந்த ஜீ.நிமல்ராஜ் வயது (22), பு.அனுராஜன் வயது (22) ஆகிய இளைஞர்களே இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளனர்.
ஊரடங்கு சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட நிலையில் தமது பொழுதை கழிப்பதற்காக 5 பேர்கொண்ட நண்பர்கள் கதிரவெளி கடற்கரைக்கு சென்று இளநீர் குடித்துவிட்டு பின்னர் கடலில் குளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் சடலங்களை மீனவர்கள் மற்றும் சுழியோடிகளின் உதவியுடன் மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக கதிரவெளி பிரதேசம் சோகத்தில் உள்ளது.
வங்கக் கடலில் தற்போது ஏற்பட்டுள்ள தாழ் அமுக்கம் காரணமாக கடல் அலையில் உயரமும் வேகமும் அதிகமாகவுள்ளது.
நேற்று இரவு முதல் மட்டக்களப்பில் தாழ் அமுக்கம் காரணமாக கடல் அலை வழமைக்கு மாறாக முன்நோக்கி வந்துள்ளது.
இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களது உடமைகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, முல்லைத் தீவு அளம்பில் செம்மலை கடலில் நேற்று குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்ததைச் சேர்ந்த சகோதரர்கள் மூவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.