வாழவழியில்லையெனில் முதியோர் கொடுப்பனவுக்கு விண்ணப்பிக்கலாம்!

0
10

 

ஓய்வூதியம் இன்றி தமக்கு வாழ்வதற்கு வழியில்லையெனில் வாழ்வாதாரக் கொடுப்பனவு கோரி பிரதேச செயலாளர் ஊடாக முன்னாள் எம்.பிக்கள் விண்ணப்பம் தாக்கல் செய்ய முடியும்.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் நேற்று மேலும் கூறியவை வருமாறு,

” வாழ்வதற்கு கஷ்டப்படும் மக்கள் தொடர்பில் பிரதேச செயலகம் ஊடாக தற்போது அனைத்து பகுதிகளிலும் ஆராயப்பட்டுவருகின்றது. அரச அதிகாரிகள் இதற்குரிய பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, வாழ்வதற்கு வழியில்லையெனில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விணப்பங்களை தாக்கல் செய்ய முடியும்.
அஸ்வெசும, சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு, முதியோர்களுக்கான கொடுப்பனவு உள்ளிட்ட கொடுப்பனவுகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன. எனவே, முன்னாள் எம்.பிக்கள் விண்ணப்பங்களை தாக்கல் செய்தால் அது தொடர்பில் அரசாங்கம் பரிசீலிக்கும்.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here