வாழ்த்தியவர்களுக்கு நன்றி!

0
5

திரைப்பட நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நேற்றைய தினம் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

அவருக்கு ஏராளமானோர் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்த நிலையில், வாழ்த்தியவர்களுக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்த அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், உலகெங்கிலும் இருந்து வாழ்த்து மழையைப் பொழிந்த திரைப்படத் துறை மற்றும் ஊடகத் துறை நண்பர்கள், நலம் விரும்பிகள், என் நெஞ்சில் குடியிருக்கும் தவெக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி.

மக்களுக்கு சேவை செய்வதற்கான எனது பயணத்தை நீங்கள் அளிக்கும் ஆதரவு மேலும் ஊக்குவிக்கிறது என்றும், பிரகாசமான எதிர்காலத்துக்காக நாம் அனைவரும் ஒன்றாக அணிவகுத்துச் செல்வோம் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here