புதிதாக அமைச்சரவை தகுதியில்லாத அமைச்சர்கள் இருவரும் பிரதியமைச்சர் ஒருவரும் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு.
அமைச்சரவை தகுதியில்லாத அமைச்சர்கள்
ரவீந்திர சமவீர – தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்
வி.ராதாகிருஷ்ணன் – விசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சர்
பிரதியமைச்சர்
அப்துல்லாஹ் மஹ்ரூப் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதியமைச்சர்
இதனிடையே அமைச்சர் தயா கமகேக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய அவருக்கு சமூக வலுவூட்டல் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.