விஜயகலா மகேஸ்வரன் விடுதலை

0
171

பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுதலை செய்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(19) உத்தரவிட்டுள்ளது.

இந்த முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தை மீள ஸ்தாபிக்க வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு இதற்கு முன்னர் பிணை வழங்கப்பட்டிருந்தது.

சந்தேகநபருக்கு எதிரான வழக்கை தொடர்வதற்கு போதிய சாட்சியங்கள் இல்லை என சட்டமா அதிபர் அறிவுறுத்தியதாக பொலிஸார் முன்னதாக நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here